பஹல்காம் பைசரன் புல்வெளி அருகே சேற்றில் புதைந்து கிடந்த காலணிகள் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், கடற்படை அதிகாரி வினய் நர்வால் உட்பட 25 இந்தியர்களும், 1 நேபாள குடிமகனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதற்கிடையே தாக்குதல் நடைபெற்ற பஹல்காம் பைசரன் புல்வெளி அருகே சேற்றில் புதைந்து நிலையில் பல காலணிகள் காணப்படுகின்றன.
இவை பயங்கரவாதிகள் பயன்படுத்தியதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.