பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ விசாக்கள் வருகிற ஏப்ரல் 29ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா காலாவதியாகும் முன்பாக அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியர்கள் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும், அங்குள்ள இந்தியர்கள் விரைவில் நாடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.