பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி இந்தியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டுத் தூதர்களுக்கும் மத்திய அரசு விளக்கமளித்தது.
தங்களது நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என வெளிநாட்டுத் தூதர்களை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இரு நாடுகளும் ராஜாங்க ரீதியிலாக நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், கடற்பரப்பில் ஏவுகணை சோதனையையும் நடத்துவதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.