பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகக் காஷ்மீரில் முன்னணி நாளிதழ்கள் தங்களது முகநூல் பக்கங்களைக் கருப்பு நிறத்தில் அச்சிட்டு செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
துயரத்தில் மூழ்கிய காஷ்மீர் போன்ற தலைப்புகளோடு வெளியான நாளிதழ்கள், மனிதாபிமானமற்ற தாக்குதல்களுக்குக் காஷ்மீர் மக்களின் ஒட்டுமொத்த கண்டனத்தைப் பிரதிபலித்தன.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்தன. மேலும், சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்தை ஒலிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாளிதழ்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.