சென்னையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எழிலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், தேர்தலின்போது பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு பின்னர் அவற்றை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்துவது கண்டனத்திற்குறியது என தெரிவித்தார்.