நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நீச்சல் பழக சென்ற மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் அருகே காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்ற மாணவர், கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார். இடுப்பில் குடுவை போன்ற கேன் ஒன்றை கட்டிகொண்டு கிணற்றில் குதித்தபோது கயிறு கழன்றதால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.