தமிழக அரசை கண்டித்து தென்காசியில் நியாய விலை கடை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது விநியோக திட்டத்திற்கான தனித்துறையை உருவாக்க வேண்டும், கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அரசு நியாய விலை கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட முழுவதிலும் இருந்து ஏராளமான ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டதால் சுமார் 2 ஆயிரத்து 800 ரேஷன் கடைகள் மூடப்பட்டன.