பாரத மாதாவின் புகழ் காக்க அறப்போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டுள்ள பாஜகவினருக்கு அக்கட்சியின மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாப்பாரப்பட்டி பாரதமாதா கோவிலுக்கு பூட்டுப்போட்ட சமூக விரோதிகளை கண்டித்து தமிழக பாஜகவினர் ஆலய நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கில் இருந்து கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 11 பேரை பொய் வழக்கு என கூறி தர்மபுரி நீதிமன்றம் விடுவித்தது.
பாரத மாதாவின் புகழ் காக்க அறப்போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டுள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் உள்ளிட்ட 11 நிர்வாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்தீர்ப்பு பாஜகவின் தேசிய உணர்வையும் பாரத மாதாவின் புகழையும் ஒருசேர தழைத்தோங்க செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.