ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுட்டரில் லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி சுட்டு கொல்லப்பட்டார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குல்னார் அஜாஸ் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அந்த பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி சுட்டு கொல்லப்பட்டார். மேலும், இந்த தாக்குதலில் 2 வீரர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.