கர்நாடகாவில் விவசாயி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தனியார் குவாரி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிக்கபள்ளாப்பூரா மாவட்டத்தில் உள்ள 3 கிராமங்கள் வழியாக அங்குள்ள கல் குவாரிகளுக்கு செல்ல, பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தனியார் குவாரி உரிமையாளரான சக்லேஷ் இந்த பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், அவருக்குக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பில், ரவி என்ற விவசாயியை சக்லேஷ் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சக்லேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.