தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோயிலில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.
சூரியன் தனது ஒளிக்கதிர்களை இறைவன் மீது படரச் செய்து வழிபடும் காட்சியே சூரிய பூஜை என்று அழைக்கப்படுகிறது.
சித்திரை மாதம் 11-ஆம் நாளையொட்டி நடைபெற்ற சூரிய பூஜையில், மூலவர் நாகேஸ்வர் மீது சூரியனின் கதிர்கள் படர்ந்தது.
இதைத்தொடர்ந்து, நாகேஸ்வரருக்கும், சூரிய பகவானுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.