கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மளிகை கடை உரிமையாளரைக் கொலை செய்ய முயன்ற மின்வாரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். இந்த நிலையில், அங்கு மதுபோதையில் வந்த மின்வாரிய ஊழியர் அன்புச்செல்வன், விஜயகுமாரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மளிகைக் கடை உரிமையாளர், அன்புச்செல்வனின் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மின்வாரிய ஊழியர் அரிவாளுடன் விஜயகுமாரைக் கொலை செய்ய முயன்றார். இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.