ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், துடு-பசந்த்கர் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். அப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா எனத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.