சேலம் அருகே கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், அரசு அதிகாரிகள் செல்போன் உபயோகித்துக் கொண்டிருந்த அவலம் அரங்கேறியுள்ளது.
மேட்டூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்தனர்.
அப்போது அதிகாரிகள் செல்போன் உபயோகித்துக் கொண்டிருந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.