கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி சாலையில் உள்ள சிவன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் 2-ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு சோலையாறு, மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஆனைகட்டியிலிருந்து மாங்கரைக்கு படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் ரஜினிகாந்த் வழியில் உள்ள மாதேஸ்வரன் சிவன் கோயிலில் வழிபட்டார்.