கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே சுற்றுலா வந்த 3 கல்லூரி மாணவர்கள் ஆழியார் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 25 பேர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் ஆழியார் அணையை ஒட்டி உள்ள ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற 2 மாணவர்களும் நீரில் மூழ்கி மாயமாகினர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் மாணவர்கள் தருண், ரேவந்த், ஆண்டோஜெனிப் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.