ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.