முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி நடைபெறவுள்ள குத்துச்சண்டை போட்டிக்காக அரசுப் பள்ளி வளாகம் திமுக கொடியால் அலங்கரிக்கப்பட்டிருப்பதற்குக் கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் திமுக சார்பில் குத்துச்சண்டை போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அரசுப் பள்ளி நுழைவாயில் முன்பு திமுகவின் கொடி வண்ணத்தில் முகப்பு மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அரசு பள்ளியில் இருந்து மின்சாரம் திருடப்பட்டு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசுப் பள்ளி வளாகத்தில் திமுக கட்சி நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.