கொடைக்கானலின் பிரபல சுற்றுலாத் தலமான வட்டகானல் பகுதியில் துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில், பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அந்த வகையில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடமான கொடைக்கானலின் வட்டகானல் பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.