சென்னையில் 16 வயது சிறுமியைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்ற கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மதன் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாகச் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறை, மதன் குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறுமியைப் பழிவாங்க எண்ணிய மதனின் சகோதரர் பாபு, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, கடைக்குச் சென்ற 16 வயது சிறுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
தொடர்ந்து சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.