காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜார்ஜ் சோரோஸ் மற்றும் DEEP STATE தொடர்புடைய நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது. இதற்காக, ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை, ராகுல் காந்தி பயன்படுத்திக் கொண்டதாக, இஸ்ரேல் உளவுத்துறை ஆதாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்தில் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கான 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை அதானி குழுமம் இறுதி செய்திருந்தது. புவிசார் அரசியலில், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்துக்கான முக்கிய ஒப்பந்தம் இது என்று கூறப்பட்டது.
இந்த நேரத்தில் தான் 2023ம் ஆண்டு ஜனவரியில், ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடிகளில் ஒன்றை அதானி குழுமம் திட்டமிட்டுச் செய்ததாகக் குற்றம் சாட்டி ஒரு மோசமான அறிக்கையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்தே, இஸ்ரேல் உளவுத் துறையான மொசாட் ரகசிய கண்காணிப்பு நடவடிக்கையைத் தொடங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலியான வருவாய் ஈட்டவும், நிதிகளை ஏமாற்றவும், “வாஷ் டிரேடிங்” மூலம் பங்கு விலைகளைக் கையாளவும், அதானி குழுமத்தின் ஷெல் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையை முற்றிலுமாக அதானி குழுமம் மறுத்திருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையால், சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை அதானி குழுமம் இழந்தது.
அதானி குழுமத்தைப் பலவீனப்படுத்தினால், துறைமுக ஒப்பந்தத்தை மட்டுமல்ல, இந்தியாவுடன் சேர்ந்து இஸ்ரேல் கட்டியெழுப்பும் அனைத்து முயற்சிகளும் தடைபடும் என்று இஸ்ரேல் பிரதமர், அதானியிடமே கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மீதான மறைமுக தாக்குதல் என்று விவரித்த நெதன்யாகு தனது நண்பர்களைப் பாதுகாப்பதில் இஸ்ரேல் எப்போதும் உறுதியாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதன்பிறகே, மொஸாட், (Operation Zeppelin)”ஆபரேஷன் செப்பெலின்” என்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. ஹிண்டன்பர்க்கின் நிறுவனர் ஆண்டர்சனும் அவரது அலுவலகமும் உடனடியாக கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டன. (Tzomet ) ட்ஸோமெட் மற்றும் ( Keshet ) கெஷெட் என்ற இரண்டு பிரிவுகளும் வேகமாக செயல்படத் தொடங்கின.
ஹிண்டன்பர்க் அறிக்கையை ஏற்பாடு செய்த சர்வதேச நெட்வொர்க்கை கண்காணித்து யார், யார், அதன் பின்னணியில் உள்ளனர் என்பதை மொசாட் கண்டுபிடித்தது.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் பின்னணியில், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், ஹெட்ஜ் நிதிகள்,பிரபல நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என ஒரு பெரிய நெட்வொர்க் இருந்ததை மொசாட் சுட்டிக்காட்டியது. அவர்களில் பலர், பைடன் நிர்வாகம், அமெரிக்க உளவுத்துறை சமூகம் மற்றும் கோடீஸ்வர நிதியாளர் ஜார்ஜ் சோரோஸுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சாம் பிட்ரோடா உள்ளிட்ட இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் ஹிண்டன்பர்க் அறிக்கை சதியில் ஈடுபட்டுள்ளதை மொசாட் ஆதாரங்களுடன் கண்டுப்பிடித்தது. சாம் பிட்ரோடாவின் தனிப்பட்டசர்வர்களை மொசாட் ஹேக் செய்து பார்த்ததில், ராகுல் காந்தி உட்பட பல இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களும் ஹிண்டன்பர்க் அறிக்கையுடன் தொடர்புடையவர்களாக இருந்தார்கள் என்ற ஆதாரங்களையும் மொசாட் கண்டுபிடித்துள்ளது.
மொசாட்டின் உள் கோப்புகளில் “கசப்பான வம்சவாதி” என்று குறிப்பிடப்படும் ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும் அதானிக்கும் களங்கம் விளைவிக்கத் திட்டம் திட்டியதாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக, 2023ம் ஆண்டு மே மாதம், அமெரிக்க சென்ற ராகுல் காந்தி, கலிபோர்னியாவின் Palo Alto-வில், ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தயாரித்த நபர்களைச் சந்தித்ததாகவும், தொடர்ந்து நியூயார்க்கில் ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆண்டர்சனைத் தனியாகச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு அப்பால் ஐரோப்பா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் மொசாட் இதுகுறித்து ரகசிய விசாரணைகளை நடத்தியுள்ளனர். இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க ராகுல் காந்தி சதி திட்டம் தீட்டியதை, 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆண்டர்சன் ஒப்புக்கொண்டு அனுப்பிய மின்னஞ்சலையும் மொசாட் கைப்பற்றியுள்ளது.
353 பக்கங்கள் தொகுக்கப்பட்ட (“Operation Zeppelin”) ஆபரேஷன் செப்பெலின் ஆவணத்தில், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID), ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டம் (OCCRP) மற்றும் மேற்கத்திய ஊடகங்களுக்குள் உள்ள தொடர்புகள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அதானியின் உலகளாவிய வளர்ச்சியையும், இந்திய- இஸ்ரேல் நல்லுறவைக் கெடுப்பதற்காகவே ஹிண்டன்பர்க் அறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி சர்வதேச ஊடகங்களுடன் ஆவணத்தின் சில பகுதிகளை மொசாட் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், பிரெஞ்சு ஊடகமான மீடியாபார்ட் மட்டுமே மொசாட்டின் ஆவணத்துடன் தொடர்புடைய கண்டுபிடிப்புகளை வெளியிட்டது.
மொசாட்டின் ஆபரேஷன் செப்பெலின் ஆவணங்கள், இந்தியாவுக்கு எதிராக, ராகுல் காந்தி, ஜார்ஜ் சோரோஸ் போன்ற பிற இந்திய எதிர்ப்பு நெட்வொர்க்குகளுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் கூறப்படுவது அரசியல் போட்டியின் தார்மீக எல்லைகளை மீறியதைக் காட்டுகிறது.
எந்த அரசியல் லட்சியமும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும், ஒருவரின் சொந்த நாட்டைக் காட்டிக் கொடுப்பதை நியாயப்படுத்த முடியாது. மொசாட்டின் ஆபரேஷன் செப்பெலின் ஆவணங்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், அது ராகுல் காந்தி செய்தது தேசத்துரோகம் என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.