வக்பு சட்டத் திருத்தம் மத உரிமைகளைப் பாதிக்காது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
அதில் வக்பு சட்டத்திருத்தம் என்பது வக்பு வாரியத்துக்கான சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பானது என்றும், சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக மட்டுமே இதில் திருத்தங்கள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது
மேலும் வக்பு சட்டத்திருத்தம் மத உரிமைகளைப் பாதிக்காது என்றும் பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.