உதகை, கொடைக்கானலில் உரிமம் இன்றி இயங்கும் தங்கும் விடுதிகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், உதகை, கொடைக்கானலில் உள்ள அனைத்து விடுதிகளும் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் மூவர் குழுவை நியமித்து விடுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நீதிபதிகள், சட்டவிரோத தங்கும் விடுதிகள் பற்றிப் புகாரளிக்கத் தொலைப்பேசி எண், இணையதள வசதியை ஏற்படுத்தவும் ஆணை பிறப்பித்துள்ளனர்.
மேலும், தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.