ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடி தோல்வியைத் தழுவியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19 புள்ளி 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக டெவால்டு பிரெவிஸ் 42 ரன்கள் அடித்தார். தொடர்ந்து 155 ரன்கள் என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய ஹைதராபாத் அணி வீரர்கள், சிறிது நேரத்தில் ரன்களைக் குவிக்க தடுமாறினர்.
இறுதியில் 18 புள்ளி 4 ஓவர்களில் ஹைதராபாத் அணி 155 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.