மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 21ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் மற்றும் தலைவா்கள் இரங்கல் தெரிவித்தனா்.
தொடர்ந்து வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று அவரது இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வாடிகன் சென்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, போப் பிரான்சிஸின் உடல் முன்பு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.