இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவரும், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவராக செயல்பட்டவருமான டாக்டர் திரு.கஸ்தூரி ரங்கன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.
டாக்டர் கஸ்தூரி ரங்கன் அவர்களது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்குஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, தேசத்தின் விஞ்ஞானம் மற்றும் கல்வி சார்ந்த வளர்ச்சிகளுக்கு தனது பெரும் பங்களிப்பை வழங்கிய அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் என்றும் எல்.முருகன் கூறியுள்ளார்.