காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.
காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சில இடங்களில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தினர். அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
விடிய விடிய நடந்த இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பின்வாங்கினர். இந்த நிலையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் சரியான பதிலடியை கொடுத்துள்ளது.
இதனிடையே, தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கைமோ பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.