உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் நடைபெற்ற பாரம்பரிய ரயில்களின் கண்காட்சியை மக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு ஐசிஎப் தொழிற்சாலையில் பாரம்பரிய ரயில்களின் கண்காட்சி வரும் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 20 க்கும் மேற்பட்ட பழமையான மற்றும் புதுமையான ரயில் வகைகளின் மாதிரிகள் மினியேச்சர் வடிவில் காட்சிப் படுத்தப்பட்டன. அதேபோல் டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில் சேவை, நீலகிரி மலை இரயில் சேவை, தென்னிந்தியாவின் பழமையான ரயில் நிலையமான சென்னை ராயபுரம் ரயில் நிலையமும் காட்சிப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து பேசிய மினியேச்சர் கலைஞர் இந்திய ரயில்வே மற்றும் பழங்கால ரயில்களின் புரிதல்களை உண்டாக்க இந்த கண்காட்சி உதவும் என தெரிவித்தார்.