சூர்யாவுக்கு முன்பாகவே, தனுஷ் சிக்ஸ் பேக் வைத்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அப்பாவும், நடிகருமான சிவக்குமார் பேசியது சர்ச்சையானது.
அந்த நிகழ்வில் சிவக்குமார், “தன் பையன் சூர்யாவுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாராவது இருக்கிறார்களா?” எனப் பெருமையாகப் பேசினார்.
இது குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள விஷால், முதல் முறையாக தனுஷ்தான் பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார் எனவும், பிறகு தான் சத்யம், மதகஜராஜா படங்களுக்காக சிக்ஸ் பேக் வைத்தேன் என்றும் கூறினார்.