புதுச்சேரியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஆண் நண்பரைக் கழுத்தில் மிதித்து பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதலியார்பேட்டையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தன்னுடைய வீட்டில் பெண் நண்பர் விஜயலட்சுமி என்பவருடன் மது அருந்தி உள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ரவிக்குமாரைக் கழுத்தில் மிதித்துக் கொன்று விட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விஜயலட்சுமி நாடகமாடி உள்ளார்.
இதுகுறித்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து, விஜயலட்சுமி அவருக்கு உடந்தையாக இருந்த ஜோதிடர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.