கல்கி 2 திரைப்படத்தின் மேஜிக்கை காண ஆவலுடன் காத்திருப்பதாக நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார்.
‘கல்கி 2898 ஏடி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் நாக் அஸ்வின் அதன் 2-ம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துள்ள நிலையில், மீதி படப்பிடிப்பு துவங்க தாமதமாகும் என்று தெரிகிறது.
இந்நிலையில் தனது 39வது பிறந்த நாளை கொண்டாடிய கல்கி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வினுக்கு, பிரபாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிலேயே கல்கி 2 குறித்தும் பிரபாஸ் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.