தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கஞ்சா கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கிராமம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்றபோது, போலீசாரைக் கண்டதும் சிறுவன் உட்பட 3 பேர் தப்பியோட முயன்றனர்.
இதையடுத்து அவர்களை சுற்றிவளைத்து விசாரணை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து 10 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றிய போலீசார், மூவரையும் கைது செய்தனர்.