சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்குச் சிறப்புப் பூஜை நடைபெற்றது.
மஞ்சள், விபூதி, தேன், தயிர் மற்றும் ஆயிரம் லிட்டர் பால் உள்ளிட்டவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து நந்தி பகவானுக்கு மலர்மாலை சாற்றப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடத்தப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.