பிரபாஸின் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள நடிகை இமான்வி, தான் பாகிஸ்தானியரா என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடிகை இமான்வி இஸ்மாயிலை பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என எண்ணி, அவரை பிரபாஸ் படத்திலிருந்து நீக்குமாறு சிலர் இணையத்தில் கூறினர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தான் பாகிஸ்தானி இல்லை என்றும், தனது குடும்பத்தில் யாருக்கும் பாகிஸ்தான் ராணுவத்துடன் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், தான் ஒரு இந்திய-அமெரிக்கர் என்றும், லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தவர் எனவும் இமான்வி கூறியுள்ளார்.