விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் மின்னல் தாக்கி வழக்கறிஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முத்துராமலிங்க புரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முனியசாமி, நீதிமன்ற வாயிலில் உள்ள மரத்தடியில் தனது மனுதாரருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மழை பெய்த நிலையில், செல்போன் அழைப்பை எடுக்க முயன்ற முனியசாமி மீது மின்னல் தாக்கியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.