விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி பிறந்த ஸ்ரீ சுந்தர மந்திரம் இல்லத்தில் 75-வது ஆராதனை விழா வெகு விமரிசயாக நடைபெற்றது.
ரமண மகரிஷி திருவுருவ படத்திற்கு பூஜைகள் செய்து, வேத மந்திரங்கள் முழங்க, நட்சத்திர ஆரத்தியும், பஞ்ச கற்பூர ஆரத்தியும், மஹா ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது.
இந்த ஆராதனை விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தாகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.