தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகச் சேலம் நெய்க்காரப்பட்டி கொட்டநத்தன் ஏரி 100 கோடி ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த நெய்க்காரப்பட்டியில் 335 ஏக்கர் பரப்பளவில் கொட்டநத்தன் ஏரி உள்ளது.
இந்த ஏரி பகுதிகளில் ஆகாயத் தாமரை மற்றும் குப்பைகள் சூழ்ந்துள்ளதால் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதுதொடர்பாக நமது தமிழ் ஜனம் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில், நெய்க்காரப்பட்டி ஏரி 100 கோடி ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தப்படும் அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு அப்பகுதி வரவேற்பு தெரிவித்ததோடு தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.