தங்களது புதிய சிஎம்எஃப் ஃபோன் 2 ப்ரோ மாடல் பாக்ஸில் சார்ஜருடன் வரும் என்றும் நத்திங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் ஒருவரின் கோரிக்கைக்கு பதிலளித்த நத்திங் இந்தியா தலைவர் அகிஸ் எவாஞ்சலிடிஸ், சார்ஜரைச் சேர்ப்பதை உறுதிப்படுத்தினார்.
அதில், சிஎம்எஃப் போன் 2 ப்ரோவில் சார்ஜரை வழங்குகிறோம், பயன்படுத்திப் பாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் நத்திங் ஸ்மார்ட்போன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நத்திங் ஃபோன் 1 அறிமுகமானதில் இருந்தே அந்நிறுவனம் சார்ஜரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.