உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்த வடகொரியா தயாரித்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
தங்களுக்கு எதிரான போரில் வடகொரியா மற்றும் சீனாவைச் சேர்ந்த வீரர்களும், தளவாடங்களும் பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.