சவுதி அரேபியாவிற்கு 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆயுத தளவாடங்களை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாடு சீன ஆயுதங்களை கொள்முதல் செய்வதை நிறுத்தும் நோக்கில், அமெரிக்க ஆயுத தளவாடங்கள் வழங்கப்படவுள்ளன.
டிரம்ப் முதல்முறையாக அதிபராகப் பதவி வகித்தபோது சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது அமெரிக்காவுக்கு நல்லது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.