ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடிக்காமல் போனதற்கு யாஷ்தான் காரணம் என நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தெரிவித்துள்ளார்.
தற்போது இவர் நானியுடன் ஹிட் 3 படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இப்படம் வருகிற 1-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்பட புரமோசனில் பல சுவாரசியமான தகவல்களை ஸ்ரீநிதி பகிர்ந்தார். அப்போது நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணம் படத்தில் சீதை வேடத்தில் நடிக்க ஆடிஷனில் கலந்து கொண்டதாகக் கூறினார்.
ஆனால், இந்த படத்தில் யாஷ் ராவணனாக நடிப்பதால் தன்னை நடிக்க வைக்கவில்லை எனவும் ஸ்ரீ நிதி ஷெட்டி தெரிவித்தார்.