நடிகர் அஜித் – ஷாலினி தம்பதி தங்களது 25-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் – ஷாலினி இருவரும் முதன் முதலில் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படப்பிடிப்பில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக் கொண்டார்.
இதனால் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததையடுத்து, கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் ஷாலின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.