உச்சநீதிமன்றம் கெடு விதித்த நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் செந்தில் பாலாஜி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின் போது, செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கி பெரும் தவறு செய்துவிட்டோம் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர் பதவியா? பிணையா? என்பதை முடிவு செய்து திங்கட்கிழமை தெரிவிக்க வேண்டும் எனக் கெடு விதித்தனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்த நிலையில், இந்த மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார்.
இதன் மூலம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் செந்தில் பாலாஜி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீதான விவாதத்திற்கு வருகிற 29ஆம் தேதி அமைச்சர் பதில் அளிக்க வேண்டியுள்ளதால், செந்தில் பாலாஜிக்குப் பதில் அமைச்சர் ரகுபதி மசோதாவைத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது.