ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர்.
பல்நாடு மாவட்டத்தில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.