அமெரிக்காவின் நியூஜெர்சியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
நியூயார்க், கலிபோர்னியா, மிச்சிகன், புளோரிடா என பல்வேறு மாகாணங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட கடந்த சில வாரங்களாக அதிகமாக உள்ளது.
வாட்டி வதைக்கும் வெயிலால் நியூஜெர்சியில் உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வனப்பகுதியில் 19 வயது இளைஞரான ஜோசப் கிளிங் என்பவர் தீவைத்ததாகவும், இதுவே பயங்கர காட்டுத்தீ ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் கூறி அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.