தவெக தலைவர் விஜயை வரவேற்க அக்கட்சியினர் செய்த செயல்களால் கோவை விமான நிலையமே அலங்கோலமாக மாறியது.
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகக் கோவை விமான நிலையத்திற்கு விஜய் வருகை புரிந்தார்.
அப்போது, அவரை காணக் குவிந்த ஆதரவாளர்கள் விமான நிலையத்திலிருந்த பொருட்களைச் சூறையாடினர்.
இதனால், விமான நிலையத்தில் இருந்த சேர்கள், தடுப்புகள் மற்றும் பயணிகளுக்குப் பயன்படுத்தும் ட்ராலிகள் என அனைத்தும் சேதமடைந்து அலங்கோலமாக மாறியது.
அதிகளவில் குவிந்த விஜய்யின் ஆதரவாளர்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு வழங்க முடியாமல் காவல் துறையினர் திணறினர். தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் செயலால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி வாகனத்தில் தொண்டர்களை நோக்கிக் கையசைத்தவாறு விஜய் ரோடு ஷோ நடத்தினார். அப்போது தவெக தொண்டர்கள் சிலர் திறந்தவெளி வாகனத்தில் ஏறியதால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.