காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கான்கிரீட் கலவை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காஞ்சிபுரத்திலிருந்து தாம்பரம் நோக்கி கான்கிரீட் கலவை லாரி சென்று கொண்டிருந்தது. ஸ்ரீபெரும்புதூர் அருகே வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மேலும் லாரியின் இன்ஜினிலிருந்து புகை வந்ததால் சிறிது நேரம் அங்குப் பரபரப்பு நிலவியது.