பாகிஸ்தானில் ஏற்கனவே இரத்தம ஆறு ஓடுவதாக பாஜக எம்பி திலீப் கோஷ் தெரிவிவித்துள்ளார்.
சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டால் ரத்து ஆறு ஓடும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி பொதுக்கூட்டத்தில் பேசி இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ்,“பாகிஸ்தானில் ஏற்கனவே இரத்தம் ஓடுவதாகவும், அல்-கொய்தா ஒரு பக்கத்திலும், ஆப்கானிஸ்தான் மறுபக்கத்திலும் பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதாக தெரிவித்தார்.
இந்தியா என்ன செய்ய முடியும் என்பதை அவர்களுக்கு ஏற்கனவே காட்டியுள்ளோம் என்றும், பூட்டோ முன்பு போலவே இன்னும் ஒரு குழந்தைதான் என்றும் தெரிவித்தார். இதுபோன்ற பயனற்ற அறிக்கைகளை வெளியிடுவது பாகிஸ்தானின் பழைய பழக்கம் எனறும் திலீப் கோஷ் கூறியுள்ளார்.