துணை முதல்வராக இருக்கும் காரணத்தினால் அடக்கு முறையை கையில் எடுக்க உதயநிதி எண்ண வேண்டாம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை நடுக்குப்பத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை பொது இடத்தில் ஒளிபரப்ப காவல்துறை அனுமதி மறுத்ததாக தெரிவித்தார்.
கடந்தாண்டு இதே இடத்தில் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறிய அவர், தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை பொறுக்க முடியாமல் திமுக அரசு நெருக்கடி தருவதாகவும் சாடினார்.
அடக்கு முறையை கையில் எடுக்கலாம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எண்ண வேண்டாம் என்றும் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.