திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே காட்டுப் பன்றி தாக்கி மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவத்தைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மன்னவனூர் கிராமத்தில் தோட்டத்து வேலைக்கு சென்ற மூன்று பேரை காட்டுப்பன்றி தாக்கியதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காட்டுப் பன்றியை பிடிக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து, காட்டுப்பன்றியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டபோது, அவர்களை காட்டுப்பன்றி தாக்கியது. நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு காட்டுப்பன்றியை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.